மதுரை மேலமடை முடிதிருத்தும் தொழிலாளி மகள் நேத்ராவிற்கு தமிழ்நாடு மருத்துவ சமூக சங்கத்தின் சார்பில் பாராட்டு!

மதுரை மேலமடை முடிதிருத்தும் தொழிலாளி மகள் நேத்ராவிற்கு தமிழ்நாடு மருத்துவ சமூக சங்கத்தின் சார்பில் பாராட்டு!

மதுரை மேலமடை பகுதியை சேர்ந்தவர் முடி திருத்தும் தொழிலாளி மோகன். இவரது மகள் நேத்ரா. இவர் தனது மகளின் படிப்பு செலவிற்காக சேர்த்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாயை செலவு செய்து தனது மகளின் விருப்பத்தின் பேரில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு அரிசி,காய்கறிகள், உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார்.

இந்த மாணவியின் நற்செயலை பிரதமர் நரேந்திரமோடி,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பாராட்டி வருகின்றனர்.

இதை தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவ சமூக சங்க மாநில மாவட்ட மற்றும் திருப்பரங்குன்றம் கிளை நிர்வாகிகள் மாணவியை நேத்ராவை வாழ்த்தி பொன்னாடை அணிவித்தனர். இதில் மாநில, மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கீழை நியூஸூக்காக, மதுரை கனகராஜ்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!