பள்ளிக் கூடமா வியாபார கூடமா? மதுரையில் பிரபல தனியார் பள்ளியில் அத்துமீறல்: கட்டாய வசூலில் ஈடுபடும் பள்ளி நிர்வாகம்; நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை:

பள்ளிக் கூடமா வியாபார கூடமா? மதுரையில் பிரபல தனியார் பள்ளியில் அத்துமீறல்: கட்டாய வசூலில் ஈடுபடும் பள்ளி நிர்வாகம்; நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை:

தமிழக முழுவதும் கொரொனா ஊரடங்கால் பள்ளி கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டு உள்ளது.

இதனால் பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பள்ளி கல்லூரிகள் திறக்கபடுகின்ற நாளை தமிழக அரசு இதுவரை முடிவு செய்யவில்லை.

ஆனால் சில தனியார் பள்ளிகள் இப்போதே பெற்றோர்களை வதக்கி கல்லா கட்டத் தொடங்கி விட்டன.

மதுரை பழங்காநத்தம் TVS நகரில் உள்ள TVS லட்சுமி மேல்நிலை பள்ளி 6 வது வகுப்பில் புதிதாக சேருகின்ற மாணவ மாணவிகள் வருகின்ற ஜீன் 3ம் தேதிக்குள் கல்வி கட்டணத்தை செலுத்தாத பட்சத்தில் பள்ளியில் சேர்க்கை வழங்கபட மாட்டாது என்று பெற்றோர்களை அச்சுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் ஜீன் 3ம் தேதிக்குள் நடப்பாண்டு கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது..

மேலும் எல்கேஜியில் இருந்து ஒன்றாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கும் கட்டாயமாக வசூல் செய்வதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் மன உளைச்சலில் பொருளாதாரத்தில் பின் தங்கி கடன் கிடைக்காமல் பணத்துக்கு அல்லாடுகின்ற பெற்றோர்கள் இது குறித்து பள்ளி நிர்வாகம் மீது கல்வித் துறை அமைச்சர், மதுரை மாவட்ட ஆட்சியர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தனியார் பள்ளி ஆய்வாளர் ஆகியோர் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? பொருத்திருந்து பார்ப்போம்..

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!