மதுரையில் பட்டபகலில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இளைஞர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை: பழிக்கு பழி என தகவல்..

மதுரையில் பட்டபகலில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இளைஞர் கொடூரமான முறையில் வெட்டிப்படுகொலை: பழிக்கு பழி என தகவல்..

மதுரை மாநகர் மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் அருள்முருகன் (29) இவருக்கு திருமணமாகி  மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் வசித்துவருகிறார் மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் லோடுமேனாக பணிபுரிந்துவரும் அருள்முருகன் இன்று மதியம் விளாங்குடி பகுதியில் நடந்துசென்றபோது திடிரென அங்குவந்த மர்ம கும்பல் ஒன்று அருள்முருகனை  அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்னர். மேலும் அருள்முருகனின் கையை தனியாக வெட்டியதோடு முகத்தில் 20க்கும் மேற்பட்ட முறை வெட்டி முகத்தை சிதைத்துள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலயே பரிதாபமாக அருள்முருகன் உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த கூடல்புதூர் காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து அருள்முருகனின் உடலனாது உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறை பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக கூடல்புதூர் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மதுரை விரகனூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கல்மேடு பகுதியை சேர்ந்த அருள்முருகனின் உறவினரான நவநீதன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்காக பழிக்கு பழியாக நடைபெற்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொலை செய்யப்பட்ட நவநீதனின் பெரியம்மா மகன் அருள்முருகன் என்பது குறிப்பிடதக்கது.

மதுரை மாநகர் பகுதியில் பட்டபகலில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!