அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் .!

மதுரை விஷால் டி மால் & மேல மாசி வீதி மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் கிளைகளின் சார்பாக அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வழங்கினார்.

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்-ன் CSR (கார்ப்பரேட் சமூக பொருப்புணர்வு) நிகழ்ச்சி மதுரை விஷால் டி மால் & மேல மாசி வீதி மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் கிளைகளின் சார்பாக மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சு.வெங்கடேசன் (மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்), கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவிகளின் நலனிற்காகவும் அவர்களின் கல்வி இன்னையும், வாழ்க்கை தரத்தையும் உயர்த்துவதற்காக மதுரை மாவட்டத்தில் உள்ள 42 அரசு பள்ளிகளை சேர்ந்த 301 மாணவிகளுக்கு CSR (கார்ப்பரேட் சமூக பொருப்புணர்வு) மலபார் குழுமம் சார்பாக மொத்தம் சுமார் ரூபாய்.-24,70,000/- (இருபத்து நான்கு இலட்சத்து எழுபது ஆயிரம் ரூபாய்), மதிப்பிலான காசோலையை மாணவிகளுக்கு வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் சுதிர் முகமது (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு கிழக்கு மண்டல தலைவர்) நிஷாந்த் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் மதுரை விஷால் டி மால் கிளை தலைவர்), சிஹாபுதீன் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் மதுரை மேல மாசி வீதி கிளை தலைவர்), ஆகியோர் உடனிருந்தார். இவை தவிர மலபார் கோல்டு டைமண்ட்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான வணிகத்திற்கு அதன் சமூகப்பொறுப்பு முன்முயற்சிகள் இதரகாரணங்கள் ஆகும். தனது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி, சுற்றுச்சுழல் பாதுகாப்பு, மற்றும் மகளிரை அதிகாரமயமாக்குதல் என சமூக பொறுப்பு திட்டங்களுக்கு செலவு செய்கிறது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!