மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் தமது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளதாக தகவல்..
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை துணைவேந்தராக இருந்த குமார் தமது பதவியை ராஜினாமா செய்ததாக,கடந்த 29ஆம் தேதி ஆளுநருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதை ஆளுநர் ஏற்கவில்லை என்றும் ராஜினாமாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக குமார் பொறுப்பேற்ற பின் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன 136 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.மேலும் நிதி நிலை காரணம் காட்டி இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பல்வேறு காரணங்களுக்காக துணைவேந்தர் பதவியில் இருந்து குமார் விலகுவதாக கூறப்படுகிறது.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









