மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஆபத்தான அடிவயிற்றுக் குருதிக்குழாய் வீக்கத்திலிருந்து முதியவர் உயிரை காப்பாற்றிய உள்நாள அறுவை சிகிச்சை என்ற சிக்கலான சிகிச்சையை வெற்றிகரமாக செய்து உள்ளார்கள். அடிவயிற்று பெருந்தமனியில் கண்டறியப்பட்ட குருதிநாள அழற்சி 7.2.செ.மீ அளவுடன் இருந்த வீக்கத்தை சில நிமிடங்களுக்குள் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய இந்த பாதிப்பை வழக்கமான எவர் செயல்முறையில் நோயாளிக்கு காயத்தை குறைக்கும் சருமத்தின் வழியாக குருதிக்குழாய்களை அணுகி அறுவை சிகிச்சை நிபுணர்கள் இரண்டு நாட்களில் 70 வயது முதியவருக்கு சிகிச்சை முடிந்து சாதனை படைத்திருக்கின்றனர். பிறகு மூன்று மாத கண்காணிப்பையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளனர். இரத்த அழுத்தம், சுகர், புகைபிடித்தல் போன்ற காரணங்களால் வர கூடிய இந்நோய்க்கு வழக்கமான அறுவை சிகிச்சைக்கு பதிலாக குறைந்த ஊடுருவல் உள்ள இந்த மாற்று வழிமுறையை வழங்குவதனால் நோயளிகள் விரைவாக குணமடையலாம். எந்த சிரமமும் இல்லாமல் குணமடைய இம்முறை சிகிச்சை எடுத்து கொள்ளலாம் என செய்தியாளர் சந்திப்பில் கார்டியாக் சயின்சஸ் துறையின் முதுநிலை நிபுணர்கள் மருத்துவர்கள் கணேசன் அவர்கள் தெரிவித்தார். உடன் சம்பத்குமார், செல்வமணி, ஜெய பாண்டியன், தாமஸ் சேவியர் மற்றும் திலீப் ஆகியோர் உடன் இருந்தனர்.

You must be logged in to post a comment.