மதுரை பகுதிகளில் சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றி செல்வதால் ஏற்படும் விபத்து..

மதுரை மாவட்டம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சரக்கு வாகனங்களில் அதிக அளவில் ஆட்களை ஏற்றிச் செல்லும் நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் பெரும் விபத்துக்கள் உயிரிழப்புகளும் பலர் படுகாயம் படுகாயம் ஏற்பட்டு வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அதே போல் இது போன்ற வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்வது தடுப்பதற்கு போதிய விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் இது போன்ற ஆட்களை ஏற்றிச் செல்லும் ஓட்டுநர்களும் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து ஓட்டுனர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் வாகனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தகுதிச் சான்றிதழ்களின் ரத்துசெய்து வாகனங்களை திருப்பி அளிக்க கூடாது என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர் அப்போதுதான் உயிர்பலி தடுக்கப்படும் விபத்துக்கள் நடக்காது என பொதுமக்களின் கருத்து.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!