மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 83 வது வார்டு வடக்கு கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள வடுக காவல் கோவில் தெரு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த காரணத்தினாலும் ஸ்மார்ட் சிட்டி வேலை நடப்பதாலும். ஹாலோ பிளாக் கற்கள் பெயர்ந்து சேறும் சகதியுமாக இருந்தது. இதனால் அப்பகுதியை வியாபாரிகளும் பொதுமக்களும் கடுமையான பாதிப்புக்கு ஆளாகிய நிலையில் பலமுறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று (09/12/2020) கீழை நியூஸ் இணையதள செய்தியில் இதுகுறித்து செய்தி வெளியிட்டு நேரடியாக மாநகராட்சி ஆணையாளருக்கு வியாபாரிகள் படும் இன்னல்கள் குறித்தும் செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று (10/12/2020) காலையிலேயே மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உத்தரவின்பேரில் துரிதமாக களமிறங்கிய மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதி முழுவதும் சிதறி இருந்த ஹாலோ பிளாக் கற்களையும், சகதியுயும் அகற்றி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
துரிதமாக நடவடிக்கை எடுக்க உதவிய கீழை நியூஸ் இணையதள செய்தி தளத்திற்கும் மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையருக்கும் பல நாட்களாக தவித்திருந்த வியாபாரிகளும், பொதுமக்களும் நன்றியை தெரிவித்தனர்.
செய்தியாளர் .வி காளமேகம் மதுரைமாவட்டம்











You must be logged in to post a comment.