செஃப் கோஸ் கிரேசி என்ற தலைப்பில் நடைபெற்ற உணவு திருவிழாவில் முதல் ஆளாக உணவை ருசீத்த இயக்குனர் அமீர். மதுரை தூத்துக்குடி செல்லும் சுற்றுசாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செஃப் போஸ் கிரேசி என்ற தலைப்பில் இன்று 07.09.2023 முதல் செப்டம்பர் 17.09.2023 ஆம் தேதி வரை உணவுத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறுகிறது.
இந்த உணவு திருவிழாவானது நேற்று இரவு 8.00 மணிக்கு தொடங்கியது. 25க்கும் மேற்பட்ட சமையற் கலைஞர்களைக் கொண்டு 65 வகையான தென் இந்தியா., வட இந்தியா உட்பட இத்தாலி., சைனீஸ் உள்ளிட்ட பன்னாட்டு உணவு வகைகளை சமைத்து வைத்திருந்தனர்.
சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ. சிதம்பரத்தின் 152வது பிறந்த நாளை முன்னிட்டு. அவரை கௌரவ படுத்துவதற்காகவே இந்த உணவு திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த உணவு திருவிழாவில் வ.உ.சிதம்பரத்தில் மகன் வழி பேத்தியுமான திருமதி. செல்வி முருகானந்தம் தனது குடும்பத்தினருடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வ உ சிதம்பரனார் பேத்தி செல்வி முருகானந்தத்திற்கு அமிக்கா ஹோட்டல் பொது மேலாளர் பால் அதிசயராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார். வ உ சிதம்பரத்தின் பேத்தியான செல்வி முருகானந்தம் உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார், இந்த உணவுத் திருவிழாவில் வேப்பிலை அல்வா., வாழை இலையில் அல்வா., பாஸ்தாவில் புட்டு., இட்லியில் பர்கர்., கவுனி அரிசி கஞ்சி. முளைகட்டிய பயிர்கள்.நவதானிய கஞ்சி பச்சை காய்கறிகள்., பழங்கள்., இத்தாலி கான்டினெண்டல் உள்ளிட்ட உணவு வகைகளை இந்திய உணவுகள் செய்முறையிலும்., வெளிநாட்டு உணவுகளை இந்திய முறைப்படியும் ஒப்பிட்டு செய்திருந்தனர். இனிப்புகள் வகையில் உள்ளூர் முதல் வெளியூர் வரை சாக்லேட்டுகள்., கேக்குகள்.,கடலை மிட்டாய். கமரக்கட்டு முதல் மாஸ்மெல்லோ என நூற்றுக்கணக்கான வகையிலும் செய்து காட்சிப்படுத்திருந்தது அங்கே வந்திருந்தவர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
மேலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் செஃப் கோர்ஸ் கிரேசி என்ற தலைப்பிற்கு இணையாக சமையல் கலைஞர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து சமைத்த உணவை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறவும் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஓட்டலில் தங்கி இருந்த நடிகரும் பிரபல இயக்குனருமான அமீர் கலந்து கொண்டு முதல் நபராக உணவை ரசித்து உண்டார்.
மேலும் உணவுத் திருவிழாவில் கலந்து கொள்ள வரும் வாடிக்கையாளர்கள் விரும்பினால் சமையல் கலைஞர்கள் அவர்களுக்கு எளிமையாக கேக் தயாரிக்கும் முறையை சொல்லி கேக் தயாரிக்க பயிற்சி அளிக்கின்றனர்.
முதன்மை சமையல்கலைஞர் கோபி விருமாண்டி கூறுகையில் இந்த உணவுத் திருவிழாவின் நோக்கமே சத்தான உணவுகளை சாப்பிடுவதும் பாரம்பரியமான நமது உணவு கலாச்சாரத்தை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் செய்வதற்காகவே இந்த உணவுத் திருவிழா அமிக்ஹா ஹோட்டலில் நடைபெறுகிறது எனக் கூறினார்.
மதுரையைச் சேர்ந்த ரூபன் உணவுத் திருவிழாவில் கலந்து கொண்டார் அவர் கூறுகையில் தென்னிந்திய உணவுகளை மேற்கத்திய சமையல் சேர்த்து சுவையான முறையில் தயாரித்து வழங்கியது வித்தியாசமாக இருந்தது. கனடாவில் இருந்து வந்த சுற்றுலா பயணி ஜெஃப்ரி கூறுகையில் இங்குள்ள சமையல் வித்தியாசமாக சுவை மற்றும் அருமையாக இருந்தது எனக் கூறினார். கேரளாவைச் சேர்ந்த ராஜேஷ் கூறுகையில் வித்தியாசமான உணவு வகைகள் அருமையாக இருந்தது குறிப்பாக கூற வேண்டும் என்றால் நீம் அல்வா சிறப்பாக மிகவும் சுவையாகவும் இருக்கிறது.
செய்தியாளர் வி காளமேகம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print





















