தொடர்ந்து பழுதாகும் தீயணைப்பு நிலைய தரைவழி தொலைபேசி எண் அவதிப்படும் பொதுமக்கள் நிரந்தர தொலைபேசி எண் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை மண்டல தீயணைப்பு நிலையத்தில் தரைவழி தொலைபேசி என்ன ஆனது? கடந்த சில நாட்களுக்கு முன் பழுதானது சரிசெய்யப்பட்டு கடந்த ஒரு வாரமாக வேலை செய்த நிலையில் மீண்டும் பழுது ஏற்பட்டுள்ளது.
இதனால் அவசரத்திற்கு அழைக்கும் பொழுது தரைவழி தொலைபேசி எண் வேலை செய்யவில்லை இதனால் பொதுமக்களுக்கு அவசர தேவைக்காக மீண்டும் தீயணைப்பு துறையினர் சார்பாக கைபேசி என் ஒன்றை தற்காலிகமாக இப்பொழுது 94450 86209 அறிவித்துள்ளார்கள்.
இதற்கு தரைவழித் தொலைபேசி எண்ணுக்கு மாற்றாக நிரந்தரமான தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்த வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
செய்தியாளர், வி. காளமேகம் வரை மாவட்டம்


You must be logged in to post a comment.