மதுரையில் நேற்று (10/06/2020) 2 இடங்களில் தீ விபத்து போராடி அணைத்த தீயணைப்பு துறையினர்!
மதுரை மாவட்டம் மதுரை கல்லூரி அருகே மதியம் குறுகலான பகுதியில் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை டவுன் தீயணைப்புத்துறை, வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து குறுகலான பகுதியிலிருந்த எரிந்து கொண்டிருந்த தீயை துரிதமாக செயல்பட்டு அணைத்ததால் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
இதேபோன்று என்பது இரவு சுமார் 8 மணி அளவில் மதுரை வடக்கு மாசி வீதி மேல மாசி வீதி சந்திப்பில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதிகள் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை டவுன் தீயணைப்புத்துறையினர் மூன்றாவது மாடியில் தீ மளமளவென எரிந்து கொண்டிருந்தது இதுவும் குறுகலான சந்து என்பதால் இவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை.
எனினும் தண்ணீர் அடிக்கும் டியூப்களை ஒன்றாக இணைத்து தண்ணீரை பீச்சி தீயை அணைத்தனர் குறுகலான பகுதியில் இரண்டு தீ விபத்துகளும் குறுகலான பகுதியில் இருந்ததால் மிகவும் சிரமப்பட்டு தீயணைப்புத் துறையில் சாதுரியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.