கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ திருவிழா பக்தர்களுக்கு அனுமதியின்றி தொடங்கியது…

மதுரை அழகர்கோவில் பகுதியில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் வசந்த உற்சவ விழா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி தொடங்கியது.

விழாவின் முக்கிய நிழ்வாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி கோவில் உள் பிரகாரத்தில் இருந்து மேளதாளம் முழங்க புறப்பாடாகி பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பாக வந்தடைந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பின் வசந்த மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து தேவியர்களுக்கும், பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நநடைபெற்றது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில் பணியாளர்கள், பட்டர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர். திருவிழாவானது அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடைபெறும். விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், கோவில் நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!