மதுரையில் சிறப்பு கண் மருத்துவமனை திறப்பு..
மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் தொடர்ந்து தமிழகத்தில் மதுரையில் துவக்கியுள்ளது. தமிழக மக்களுக்கு உயர்தர கண் சிகிச்சை அளிக்கும் அதன் 5வது சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை மதுரையில் திறக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் தளபதி எம்.எல்.ஏ மதுரை வடக்கு, டாக்டர் ஜி.எஸ்.கே.வேலு, மேச்சிவிஷனின் தலைவர் ஏ.கணேசன், மேக்சிவிஷன் இயக்குநர் வி.எஸ்.சுதீர், மேக்சிவிஷன் குழுமத்தின் சிஇஓ மற்றும் டாக்டர் ஷிபு வர்க்கி, மேக்சிவிஷன் பிராந்திய மருத்துவ இயக்குனர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழ்நாட்டில் ‘வெளிச்சம்’ திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதம் தமிழக அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து பெரம்பலூர், தஞ்சை, திருச்சி, சேலம் மற்றும் இப்போது மதுரையில் தனது 5வது சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் மூலம் தமிழக மக்களுக்கு உயர்தர கண் சிகிச்சையை வழங்குகிறது.
மதுரையில் புதிதாக நிறுவப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை 6000 சதுர அடி பரப்பளவில், அனைத்து சமீபத்திய விஷன் டையாக்னஸ்டிக் கருவிகள் மற்றும் சூப்பர ஸ்பெஷாலிட்டி கண் பராமரிப்பு அறுவை சிகிச்சை தொழில்நுட்பங்கள், கேட்ராக்ட் மற்றும் ரெஃப்ராக்டிவ் பிழைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான மேம்பட்ட ரோபோ தொழில் நுட்பங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மாடுலர் ஹெப்பா ஃபில்டர்ஸ், 16 க்கும் மேற்பட்ட ஆலோசனை அறைகள், டையாக்னஸ்டிக் நிலையங்கள் மற்றும் விசாலமான ஆப்டிகல் ஸ்டோர்களுடன் கூடிய 4 அதிநவீன தொற்று சுட்டுப்பாட்டு ஆபரேஷன் தியேட்டர்கள் வரை உள்கட்டமைப்பு பரவியுள்ளது.
கண் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்களின் குழுவை இந்த மருத்துவமனை கொண்டுள்ளது. சராசரியாக 25 வருடங்கள் கண் பராமரிப்பில் அனுபவம் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை விரிவான கண் பராமரிப்பு சேவைகளை வழங்குகிறது.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









