மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அலுவலர்களுடனான பணி ஆய்வுக் கூட்டம்
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கம் திட்ட இயக்குநர் டாக்டர்.ஏ.அருண் தம்புராஜ், தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கம் திட்ட இயக்குநர் டாக்டர்.ஏ.அருண் தம்புராஜ், தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் .மா.சௌ.சங்கீதா, முன்னிலையில், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களுடன் பணி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கம் திட்ட இயக்குநர் டாக்டர்.ஏ.அருண் தம்புராஜ், தெரிவித்ததாவது:-
மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு முன்னோடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய முன்னோடி திட்டப்பணிகளில் எவ்வித தொய்வும் இல்லாமல் விரைந்து நிறைவேற்றிட வேண்டும். குறிப்பாக, கோரிப்பாளையம் மேம்பாலம், அப்போலோ சந்திப்பு மேம்பாலம், செல்லூர் பகுதியிலிருந்து நீர் வெளியேறுவதற்கான சிமெண்ட் கால்வாய் திட்டம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை துரிதமாக மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல, மாநகராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்படும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பணிகளை உரிய காலத்திற்குள் நிறைவேற்றிட வேண்டும்.
மேலும், மக்களுடன் முதல்வர், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் போன்ற திட்டங்களின் கீழ் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். கோடை காலம் நெருங்குவதால் குடிநீர் திட்டப் பணிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி செயல்படுத்திட வேண்டும். ஊரகம் மற்றும் நகரப் பகுதிகளில் பயன்பாட்டில் உள்ள குடிநீர் திட்டப் பணிகளை முறையே பராமரித்திடவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவைக்கேற்ப புதிய குடிநீர் ஆதாரங்களை ஏற்படுத்திடவும் அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். அதேபோல, சாலை மேம்பாட்டுப் பணிகள், தெருவிளக்கு பணிகள் போன்ற பணிகளில் எவ்வித குறைபாடும் இல்லாமல் செயல்படுத்திட வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கம் திட்ட இயக்குநர் டாக்டர்.ஏ.அருண் தம்புராஜ், தெரிவித்ததார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.கே.அரவிந்தன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மோனிகா ராணா, மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார் மாநகர காவல் துணை ஆணையர் அனிதா, மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.