திருப்பரங்குன்றம் கோயிலில் ரூபாய் 96 லட்ச மதிப்பீட்டில் புதிய வாகன நிறுத்துமிடம்!- முதல்வர் மு.க. ஸ்டாலின்  காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

திருப்பரங்குன்றம் கோயிலில் ரூபாய் 96 லட்ச மதிப்பீட்டில் புதிய வாகன நிறுத்துமிடம்!- முதல்வர் மு.க. ஸ்டாலின்  காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தமிழ் கடவுள் முருகன் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.

திருப்பரங்குன்றம் திருக்கோயில் பகுதியில் திருவிழா மற்றும்திருமண மூர்த்தங்கள் நடைபெறும் போது கடும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

இதனை தொடர்ந்து சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் கொண்டு வரப்பட்ட திட்டத்தின் மூலம் ரூபாய் 96 லட்சம் மதிப்பீட்டில் சரவணபவகை அருகில் புதிய வாகன நடத்துமிடம் அமைக்கப்பட்டது.

அதனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். காணொலிக்காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கை அருகில் புதிய வாகன காப்பகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லதுரை , துணை ஆணையர் சுரேஷ், மற்றும் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, மற்றும் மதுரை மாநகராட்சி மண்டல  தலைவர் ஸ்விதா விமல், மற்றும் காவல்துறை உதவி ஆணையர் குருசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!