தென்கரை மூலநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக பணிகளை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை..

தென்கரை மூலநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக பணிகளை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை..

மதுரை மாவட்டம்சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேதமூலநாத சுவாமி கோவில் மிகவும் சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாகும் இக்கோவிலில் சூரசம்காரம் பிரதோஷம் மற்றும் திருக்கல்யாண வைபவம் அஷ்டமி திருவிழா உட்பட பல்வேறு திருவிழா நடைபெற்று வருகிறது இந்த விழாக்களில் மதுரை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்கலிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர் இந்த நிலையில் இந்த கோவிலில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பாக கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது 12 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது வரை கும்பாபிஷேகம் நடைபெறாததால் கோயிலின் கட்டட பகுதிகள் சிதலம் அடைந்த நிலையிலும் கோவில் தெப்பம் பாசிப்படற்ந்த நிலையில் தெப்பத்தில் உள்ள நீரும் பச்சை நிறத்தில் அசுத்தம் அடைந்த நிலையில் காணப்படுகிறது இதனால் கிராம மக்கள் இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திருப்பணி வேலைகளை கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பாக ஆரம்பித்தனர் தொடர்ந்து தற்போது வரை பல்வேறு வேலைகள் தினசரி நடந்து வரும் நிலையில் ஒரு சில பணிகள் நடைபெறாமல் இருப்பதால் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான நாட்கள் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர் மேலும் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் ஆமை வேகத்தில் நடப்பதாகவும் அதற்காக ஏற்படுத்தப்பட்ட கமிட்டிகள் தங்கள் பணிகளில் சுணக்கம் காட்டுவதாகவும் ஆகையால் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கும்பாபிஷேக பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் இது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் திருக்கோவில் மண்டபத்தில் நடந்தது இக்கூட்டத்திற்கு செயல் அலுவலர் பாலமுருகன் தலைமை தாங்கினார் அலுவலக எழுத்தர் நாகராஜன் மணி ஆகியோர் வரவேற்றனர் இக்கோவிலுடைய அர்ச்சகர் செந்தில் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார் இந்த கூட்டத்தில் முன்னாள் மதுரை சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஆலடி பிரதோஷ கமிட்டி கிருஷ்ணமூர்த்தி சேகர் செந்தில் ஆலடி போஸ் உள்பட கோவில் ஸ்தாணிகர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் விரைவில் திருப்பணி வேலைகளை முடித்து மகா கும்பாபிஷேகம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது ஆலய பணியாளர் நன்றி தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!