பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கல்வி திறமை அடிப்படையில் நியமனம் செய்யப்படாமல் ஜாதி மதம் மற்றும் சூட்கேஸால் நியமனம்; மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் ஊழியர்கள் ஓய்வூதியம் வேண்டி ஆர்ப்பாட்டம்..
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இரண்டு மாதங்கள் ஓய்வூதியம் வழங்கவில்லை என கோரி ஓய்வூதியர் சங்கங்களின் சார்பாக துணைவேந்தர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 40 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் மேலும் பல்கலைக்கழக எஸ்சி எஸ்டி பிரிவு செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளும் பங்கு பெற்றனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் எண்ணிக்கை 1202 இதில் குடும்ப ஓய்வூதியர்கள் 484 பேரும் நிர்வாக ஓய்வூதியவர்கள் 240 பேரும் மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் மீதமுள்ளவர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மதங்களாக ஓய்வூதியம் சம்பளம் போன்றவை வழங்கப்படாமல் பல்கலைக்கழக ஊழியர்களின் அதிருப்தி மற்றும் நிர்வாக சீர்கேட்டில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சிக்கி வருகிறது.
இந்நிலையில் இன்று காமராஜர் பல்கலைக்கழக ஓய்வூதியர் சங்கம் சார்பில் இரண்டு மாதம் ஓய்வூதியம் வழங்கவில்லை என கூறி துணைவேந்தர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் இது குறித்து துணைவேந்தர் பதிவாளரிடம் பல்வேறு முறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை தொடர்ந்து ஓய்வூதியர் சங்கம் சார்பாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஓய்வூதியர் சங்க செயலாளர் சுவாமிநாதன் கூறுகையில் எங்களின் போராட்டம் தொடரும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றும் பத்து நாட்களில் காத்திருப்போம் அதற்கு முடிவு கிடைக்கவில்லை எனில் கண்டிப்பாக கோட்டை நோக்கியங்கள் போராட்டம் தொடரும் சட்டசபை கூடும் முன்பு ஆளுநர் வரை நிகழ்த்த வருவார் அங்கு நாங்கள் எங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டம் செய்வோம் அப்பொழுது வேறு கல்வித்துறை அமைச்சர் கல்வித் துறை செயலாளர் நிதித்துறை செயலாளர் துணைவேந்தர் அனைவரும் சென்னை வந்து தான் ஆக வேண்டும் 10 நாட்களில் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற நிறைவேற்றாவிடில் கண்டிப்பாக சட்டசபையில் நோக்கிய எங்கள் போராட்டம் தொடரும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் எங்கள் கோரிக்கையை ஏற்று எங்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பல்கலைக்கழக ஓய்வூதியர் சங்க செயலாளர் சாமிநாதன் கூறினார் பல்கலைக்கழக ஓய்வுதியர் சங்கத் தலைவர் சீனிவாசன் கூறும் போது பல்கலைக்கழகத்தில் இருந்து அனுப்பப்படும் பரிந்துரை கடிதம் நிதி துறை செயலாளர் மற்றும் உயர் கல்வித் துறை செயலாளருக்கு செல்கிறது அப்படி இருக்கையில் ஏன் அதை செயல்படுத்த வில்லை பல்கலைக்கழக துணைவேந்தர் தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை இதற்கு முன்னால் உள்ள துணைவேந்தர்கள் ஏ. எல். லட்சுமன் சாமி முதலியார், மால்கம் ஆதிசேசய்யா, சாந்தப்பா போன்ற துணைவேந்தர்கள் சென்னை சென்று அதிகாரிகளை சந்தித்ததில்லை . எல்லாமே ஃபைல்தான் பேசும் தற்போது துணைவேந்தர்கள் ஜாதி மதம் பார்த்து நியமிக்கப்படுகிறார்கள் துணைவேந்தர்கள் தகுதி அடிப்படையில் நியமயணம் செய்யப்படாமல் சூட்கேஸ் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவதால் தான் இந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இவர்கள் டப்பாவாகிவிட்டதால் அதிகாரிகள் அதிகாரிகளின் ஆளுமைக்குள் துணைவேந்தர்கள் சென்றதால் தான் இந்த நிலை ஜாதி அடிப்படையில் மதம் அடிப்படையில் பணத்தின் அடிப்படையில் தான் துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர் நேர்மையாக நியமிக்கப்பட்டிருந்தால் அந்த பைல் பேசும் என மதுரை காமராஜர் பல்கலைக்கழக பல்கலைக்கழக ஓய்வூதியர் சங்க தலைவர் சீனிவாசன் கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









