தமிழக அரசு சார்பில் பொங்கலுக்கு மண்பானை மற்றும் மண் அடுப்பு வழங்கி மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர உதவிட கோரி முதல்வருக்கு கோரிக்கை..

தமிழக அரசு சார்பில் பொங்கலுக்கு மண்பானை மற்றும் மண் அடுப்பு வழங்கி மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர உதவிட கோரி முதல்வருக்கு கோரிக்கை.

திருப்பரங்குன்றத்தில் மண்பாண்ட தொழிலாளர் பெண் தொழில் முனைவோர் நான்காவது மாநில மாநாடு நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தனியார் மண்டபத்தில் அகில இந்திய குலாலர் முன்னேற்ற அமைப்பு சாரா மண்பாண்டம் செங்கல் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் நான்காவது மகளிர் மாநாடு நடைபெற்றது

மட்பாண்ட செங்கல் தொழிலாளர்கள் மகளிர் நல மாநாட்டில் தொழிற்சங்க தலைவர் கருப்பசாமி, மாநில துணை தனவர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

தொழிற்சங்க து.தலைவர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் வரவேற்புரை கூறினர்.

மண்பாண்ட தொழிலாளர்மகளிர்.அமைப்பின் பொருளாளர் சௌமியா மற்றும் செல்வராணி அங்காள ஈஸ்வரி ஆகியோர் வரவேற்புரை கூறினார்.

மாநாட்டின் சிறப்புரையை தலைவர் தியாகராஜன் திருநீலகண்டன் பேசும் போது. தமிழகம் முழுவதும் பேரிடர் மழைக்காலத்தில் விடுபட்ட நிவாரணத் தொகை 10,000 வழங்க வேண்டும் என்றும் குலாலர் சமூகத்தை சேர்ந்த மண்பாண்டம் மற்றும் நாட்டு செங்கல் தயாரிப்பாளர்களுக்கு களிமண் எடுக்க கம்மாய், ஏரி ,குளம் ஆற்று படுகைகள் போன்றவற்றில் அரசு களிமண் சேகரிக்க உரிய அனுமதி வழங்க கோரியும்.

கல்வி வேலைவாய்ப்பில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு 5% உள் இட ஒதுக்கீடு வழங்க கோரியும் . . மத்திய அரசின் வேலை உறுதி திட்டத்தின் கீழ் கதர் கிராம தொழில் வாரியம் மூலம் தொழில் மானிய கடன் வழங்கி தொழில் முனைவரை ஊக்குவித்தற்கு நன்றி தெரிவித்தும்

அகில இந்திய மண்பாண்ட மகளிர் குழுக்களுக்கு உரிய அங்கீகாரம் அளித்து தொழிலில் மேம்படுத்த உதவிய மத்திய ,மாநில அரசிற்கு நன்றியினையும் தமிழக முதல்வருக்கு வரும் பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசு சார்பில் ரேசன் கடைகளில் மண்பானை மற்றும் மண் அடுப்பு வழங்கி மண்பாண்ட தொழிலாளர் வாழ்வாதரம் உயர உதவ வேண்டும் என தலைவர் தியாகராஜன் திருநீலகண்டர் தெரிவித்தார்.

மாநாட்டு முடிவில் வளையன்குளம் திருப்பதி நன்றியுரை கூறினார்.

பேட்டி. தியாகராஜன் திருநீலகண்டர் தலைவர் அகில இந்திய குலாலர் முன்னேற்ற சங்கம்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!