மதுரையில் வெளிநாட்டு ரூபாயை மாற்றுவது போன்று வெளிநாட்டு பணத்தை திருடி தப்பிய நபர் கைது..
மதுரை நேதாஜி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் (SRS Forex) வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் மாற்றும் மையத்தில் ஈரான் நாட்டு பணத்தை மாற்றுவது போல் நடித்து அங்கிருந்து வெளிநாட்டு பணத்தை திருடி சென்றதாக அந் நிறுவனத்தார் கொடுத்த தகவலின் பெயரில் மதுரை திடீர்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய வந்த நிலையில் தப்பிச் சென்ற நபர் நாகர்கோயில் பகுதியில் இதேபோன்று வெளிநாட்டு பணத்தை மாற்றுவது போன்று அங்கிருந்த பணத்தை திருட முயற்சி செய்தபோது அங்கிருந்த ஊழியர்கள் அவரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து நாகர்கோவில் போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் டெல்லி, மார்க்கெட் சவுத் பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பது தெரிய வந்தது தொடர்ந்து அவரை நாகர்கோவில் போலீசார் மதுரை திடீர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததன் பேரில் முகமது அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









