மதுரை விமான நிலையத்தில் மீண்டும் அடாவடி செய்யும் வடமாநில டோல்கேட் ஊழியர்கள். – நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் வசூல் செய்ய முயற்சி..

மதுரை விமான நிலையத்தில் மீண்டும் அடாவடி செய்யும் வடமாநில டோல்கேட் ஊழியர்கள். – நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் வசூல் செய்ய முயற்சி..

மதுரை பெருங்குடி பகுதியில் அமைந்துள்ளது மதுரை விமான நிலையம். மதுரை விமான நிலையத்தில் பயணிகள் நாள் ஒன்றுக்கு 1500 முதல் 3000 திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். மதுரை விமான நிலையத்தில் பயணம் செய்யும் பயணிகளுடன் அவர்கள் உறவினர்களும் அதே போல் மற்ற மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளை வரவேற்க அவர்களது உறவினர்களும் வருகை புரிவர்.

இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் வருகை தரும் பயணிகளின் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் வகையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளே செல்லும் வாகனங்கள் மற்றும் வெளியே செல்லும் வாகனங்களின் வருகை பதிவு செய்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து மதுரை விமான நிலையத்திற்குள் உள்ளே சென்ற வாகனங்கள் 3 நிமிடத்திற்கு மேல் இருந்தால் கட்டுன வசூலிக்கப்படும் என்றும் மூன்று நிமிடத்திற்குள் வெளியே சென்றாள் கட்டணம் வசூலிக்க படாது என்றும் சுங்கச்சாவடி சார்பில் அறிவிப்பு பலகை ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மதுரை விமான நிலையத்தை பொருத்தவரை வாகனங்கள் வந்து செல்லும் பாதை முக்கிய பிரமுகர்கள் அரசியல்வாதிகள் வரும்பொழுது மிகுந்த கூட்ட நெரிசல் ஏற்படும். இதனால் பயணிகள் வாகனங்கள் வந்து செல்வதற்கு தாமதம் ஏற்படும்.

இந்த நிலையில் மதுரை விமான நிலையம் சுங்கச்சாவடியை வடமாநிலத்தவர் டெண்டர் எடுத்துள்ளதால் தினசரி மதுரை விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் வாகனங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட அதிக அளவு வசூல் செய்கின்றனர் அரை மணி நேரத்திற்கு 20 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் அறுபது ரூபாய் பணம் கேட்கும் மதுரை விமான நிலைய சுங்கச்சாவடி ஊழியர்கள் நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

வட மாநில ஊழியர்களின் செயல் குறித்து பாதிக்கப்பட்ட நபர் மீண்டும் மதுரை விமான நிலையத்திற்கு சென்றபோது வட மாநில ஊழியர்கள் அரை மணி நேரத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்ட இருவது ரூபாய் கட்டணத்திற்கு பதில் 60 ரூபாய் முதலில் கேட்டுள்ளார். அதிக பணம் கேட்டு வசூல் செய்யும் காட்சியை வீடியோவாக எடுக்கப்பட்ட பின்னர்.

தொடர்ந்து பயணி வீடியோ எடுப்பதை அறிந்து வடமாநில சுங்கச்சாவடி ஊழியரும் வீடியோ எடுத்து வாக்குவாதம் செய்வது போல சித்தரிக்க முயற்சி செய்து கட்டணம் 20 ரூபாய் தருமாறு கூறியுள்ளார். அதற்கு பயணி முதலில் அறுபது ரூபாய் கேட்டுவிட்டு இப்போது இருபது ரூபாய் தருமாறு கூறுகிறீர்கள் என விவாதம் செய்துள்ளது. தற்போது இந்த காட்சி மீண்டும் வைரலாகி வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!