“போக்குவரத்துக்கு கடும் இடையூறு!” எடை நிலையத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை..
மதுரை திருப்பரங்குன்றம் அருகே காஷ்மீர் – கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் இருந்து கூத்தியார்குண்டு கிராமத்திற்கு செல்லக் கூடிய பிராதான சாலையில் தனியார் லாரி எடைமேடை நிலையம் உள்ளது தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் எடை போட்டு செல்லுகின்றனர்.
கூத்தியார்குண்டு ஊருக்குள் செல்லக் கூடிய பிரதான சாலையில் லாரிகள் வழிமறித்து காத்திருப்பதால் போக்குவரத்திற்கு பெரிதும் இடையூறாக உள்ளதாகவும், அதிக லாரிகள் வந்து செல்வதால் சாலைகள் சேதமடைந்து இரு சக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுவதாகவும் சேதமடைந்த சாலையில் இருந்து வெளிவரும் கல்,மணல் தூசியால் மாசு ஏற்படுவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.