மதுரை பெருங்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் குறைகளை கூறி அதிகாரிகளை கவர்ந்த பள்ளி மாணவி..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி மன்றம் ஒன்றியம் பெருங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கிராம சபை கூட்டத்தில் எட்டாம் வகுப்பு மாணவி கனிமொழி சுகாதாரம் குறித்து அதிகாரியிடம் பேசியது பலரின் பாராட்டுதலை பெற்றது. பொதுவாக கிராம சபை கூட்டம் என்றாலே கிராமத்து பெரியவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளும் என்ற நிலையில் மட்டுமே இருந்தது.
இந்நிலையில் இன்று திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் பெருங்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பத்ம முருகேசன் துணைத் தலைவர் விஜயலட்சுமி ராஜேந்திரன் திருப்பரங்குன்றம் தாசில்தார் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது அப்போது பொதுமக்கள் பல்வேறு தரப்புகளில் இருந்து தங்களது குறைகளை அதிகாரியிடம் தெரிவித்து வந்தனர் இந்நிலையில் பெருங்குடி கிராமத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற சிறுமி தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் . தனது வீட்டின் அருகில் உள்ள சாக்கடையில் குப்பை அள்ளும் சுகாதார அலுவலர்கள் அங்கேயே விட்டு செல்கின்றனர் அதை அப்புறப்படுத்துவது இல்லை .
எடுக்கப்பட்ட குப்பைகள் மீண்டும் சரிந்து சாக்கடை அடைத்து நீர் தேங்கி வருவதால் அதனால் டெங்கு ,மலேரியா நோய் பரவுகிறது ஆகையால் குப்பையை அள்ளியதும் அவற்றை உடனே அப்புறப்படுத்த கோரிக்கை விடுத்தார்.
மாணவி கனிமோழியின் இப் பேச்சைக் கேட்டு அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உடனடியாக அப்புறப்படுத்துவதாக உறுதி அளித்தனர்
கிராம சபை கூட்டத்தில் கனிமொழி தனியாக வந்து தனது பகுதியின் குறைகளை கூறி பேசியது பொதுமக்களிடமும் அதிகாரியிடமும் பெரும் வரவேற்பை பெற்றது.
பெருங்குடி ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டத்தில் ஆவின் வளர்ச்சி அலுவலர் ரீனா குமாரி, பெருங்குடி ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமா பெருங்குடி ஊராட்சி செயலாளர் செந்தில் வேல்முருகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









