இளம்பெண்ணுக்கு வலுகட்டாயமாக தாலிகட்ட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்..

இளம்பெண்ணுக்கு வலுகட்டாயமாக தாலிகட்ட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்..

மதுரை கே.புளியங்குளம், கன்னிகோட்டை தெருவைச் சேர்ந்தவர் அழகு (19) பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர், கருப்பாயூரணி, சீமான் நகர், பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி, பட்டபடிப்பு படித்து வருகிறார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (19) என்பவரும், ஒன்றை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

பின், தமிழ்ச்செல்வனின் நடவடிக்கை பிடிக்காததால், அவரிடமிருந்து விலகிச் சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் அழகு, மொபைல் போனில் அழைத்த தமிழ்ச்செல்வன் மதுரை, ஆழ்வார்புரத்தில் உள்ள தனியார் துணிக்கடை அருகில் வருமாறு கூறியுள்ளார்.

அங்கு வைத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, அழகு கட்டாயப்படுத்தியதுடன் மீறினால் அவருடன் எடுத்த போட்டோக்களை முகநூலில் வெளியிடுவதாக, தமிழ்ச்செல்வன் மிரட்டியுள்ளார். அழகு

அதற்கு சம்மதம் தெரிவிக்காததால் வலுகட்டாயமாக அவருக்கு, வலுகட்டாயமாக தாலி கட்ட முயன்றார்.

தப்பியோட முயன்ற அழகு தமிழ்ச்செல்வன் விரட்டிச் சென்றார். அவரை, உறவினர் உதவியுடன் பிடித்த, தர்ஷினி மதிச்சியம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் வழக்கு பதிந்து தமிழ்ச்செல்வனை கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!