ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாளை தமிழ்நாடு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என மதுரையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி..
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் 500க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்களுடன் தூய்மைப் பணியை மேற்கொண்டார், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கோயில்களை சுத்தப்படுத்தும் பணியினை பிரதமர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியில் அமைந்திருக்கும் கலாராம் கோவிலை பிரதமர் சுத்தப்படுத்தினார், இந்நிலையில், உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் வெளி வீதிகளில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தூய்மை பணிகளை மேற்கொண்டார், முன்னதாக, மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதியில் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறுகையில்: “அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதே ஒவ்வொரு இந்தியனின் 500 ஆண்டுகள் கனவாகும், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது ஒவ்வொரு வீடுகளிலும் விளக்கு ஏற்ற வேண்டும், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நாம் அனைவரும் தீபாவளி பண்டிகை போல கொண்டாட வேண்டும், பாரத பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் கடுமையான விரதத்தை மேற்கொண்டு ராமர் தொடர்பான அனைத்து பகுதிகளுக்கும் பயணத்தை மேற்கொண்டு நாளை கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கோவில்கள் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் வகையில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை தமிழ்நாடு அரசு விடுமுறை அளிக்க வேண்டும், பாரதிய ஜனதா கட்சியினர் மீடியா வெளிச்சத்திற்காக கோவில்களை சுத்தப்படுத்தவில்லை கோவில்கள் அழுக்கு படிந்த நிலையில் உள்ளதால் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தமிழக மக்களின் ஆன்மீகம் வழிபாட்டு விஷயத்தில் மக்களோடு தமிழக அரசு ஒத்துப் போக வேண்டும், ராமர் கோவில் சிறப்பை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைக்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். ஓட்டு வங்கிக்காக மத விஷயங்களில் எதிர்மறையாக செயல்படக்கூடாது” என கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









