அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டுமதுரையில் தொடர் ராமநாம பாராயணம்..

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு
மதுரையில் தொடர் ராமநாம பாராயணம்..

அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு மதுரை எஸ்எஸ்.காலணி பகுதியில் உள்ள மகாபெரியவா கோயிலில் வைத்து தொடர் ராம நாம பாராயணம் நடைப்பெற்றது..

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப்பிரமாண்ட மாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. ராஜஸ்தான் கற்கள் கொண்டு 350 தூண்களோடு கருவறை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் மாற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை நாளை 22ம் தேதி நடைப்பெறுகிறது. இந்த வைபவத்தை உலகமே உற்று நோக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் கோயில் பணிகள் முழு வீச்சில் முடிந்துள்ளன. நாடு முழுதும் உள்ள பக்தர்கள் இவ்விழாவிற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு தலைமையில் ஸ்ரீராம.. ராம..’ ‘ஹரே ராம.. ஹரே ராம..’ என தொடர் ராம நாம பாராயணம் செய்யப்பட்டது.

முன்னதாக ராமர் விக்கிரகத்திற்கு சிறப்பு பூஜைகள், மஹா தீபாராதனை செய்யப்பட்டது‌.
இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!