தற்போது விமான கட்டணங்கள் மிகவும் கூடுதலாக உள்ளது. விமான நிறுவனங்கள் பண்டிகை காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது மக்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகிறது . சிறிய ரக ஏடிஆர் விமானங்களுக்கு பதில் பெரிய விமானங்களை இயக்கினால் கட்டணம் குறை வாய்ப்புள்ளது விமான நிறுவனங்கள் கருத்தில் கொண்டு பெரிய ரக விமானங்களை இயக்க வேண்டும்– திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேட்டி..
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள எம்ஜிஆரின் திரு உருவ சிலைக்கு திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதை தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறுகையில்:
அவனியாபுரத்தில் இரண்டாவது சிறந்த மாடுபிடி வீரருக்கு பரிசு கொடுக்காதது குறித்த கேள்விக்கு:
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு பரிசு பொருட்கள் வழங்க பல்வேறு இடங்களில் தயாராக இருந்தார்கள். அதை முறைப்படி வகுக்க தவறி விட்ட காரணத்தால் கொடுக்க இயலாமல் போய்விட்டது. பார்வையாளர்களுக்கு இடம் ஒதுக்காத காரணத்தால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ஓரை கண்ணால் பார்ப்பது போல் ஆகிவிட்டது. ஜல்லிக்கட்டு பங்கேற்ற வீரர்கள் அணிந்திருந்த பனியன்களில் முதல்வர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் புகைப்படங்கள் இருந்ததால் வீரர்கள் அணிந்து கொள்ள விரும்பவில்லை. அடுத்த முறை அவனியாபுரத்தில் வெற்றி பெறும் இரண்டாவது வீரருக்கு பரிசளிக்க தவறினால் சட்டமன்ற உறுப்பினர் சார்பாக அதிமுக சார்பாக நாங்கள் பரிசளிப்போம்.
*மதுரை எய்ம்ஸ் டெண்டர் தாமதம் குறித்த கேள்விக்கு:*
எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்த அளவில் மத்திய அரசு முதல் படியை எடுத்து வைத்து ஏற துவங்கி விட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது காலத்தின் கட்டாயம். 26 இல் எடப்பாடியார் முதல்வர் ஆனவுடன் ஜேம்ஸ் திறப்பு விழா நடைபெறும்.
*மதுரை விமான நிலையத்திற்கு 90 ஏக்கர் நிலம் இன்னும் தமிழக அரசு வழங்காதது குறித்த கேள்விக்கு:*
விரிவாக்கத்திற்கு வழங்கப்பட வேண்டிய இடத்தில் நீர்ப்பிடிப்பு பகுதி இருப்பதால் நீதிமன்ற ஆணையை பெற்றோ அல்லது அது இல்லாமல் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய முயற்சியை செய்யலாம். எனவே சின்ன சின்ன விமானங்கள் விரிவாக்கப்படக்கூடிய சூழலில் மதுரை விமான நிலையமும் விரிவாக்கப்பட வேண்டும் என வேண்டுகிறோம். மற்ற இடங்களை விட மதுரை விமான நிலையத்தில் பயண கட்டணம் மிக அதிகமாக உள்ளது. சிறிய ரக விமானங்களை இயக்குவதால் நெரிசல் ஏற்படுகிறது. அரசால் இது தடுக்கப்பட வேண்டும்.
திருவள்ளுவர் ஆளுநர் விவகாரம் குறித்த கேள்விக்கு:
திருவள்ளுவரை யார் வம்புக்கு இழுத்தாலும் நாங்கள் விரும்பவில்லை. திருவள்ளுவரை நாங்கள் திருவள்ளுவராகவே பார்க்கிறோம். அவரை விமர்சனப் பொருளாக்க நாங்கள் விரும்பவில்லை என்றார்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.