தமிழகத்தில் கொத்தடிமை தொழில் அகற்றப்படும் – மதுரை மண்டல தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் பேட்டி !

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர்கள் நலத்துறை சார்பாக 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் கொத்தடிமை தொழிலை அகற்றுவோம் என்ற விழிப்புணர்வு பிரச்சார பேரணி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. 

இதனை தொழிலாளர் துறை மதுரை மண்டல இணை ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில் சார்பு நீதிபதி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சரவணசெந்தில்குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சந்திரசேகர் மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த இணை ஆணையர் சுப்ரமணியன் கூறுகையில், தமிழகத்தில் 2030 ஆம் ஆண்டுக்குள் கொத்தடிமை தொழிலை முற்றிலுமாக அகற்ற அரசு நடவடிக்கையின் பேரில் மதுரை மாநகரம் முழுவதும் சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய கையெழுத்து இயக்க பிரச்சார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது கொத்தடிமை தொழில் என்பது முன் பணம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு வழங்கக்கூடிய சராசரியான ஊதியத்தை வழங்காமல் அவர்களுக்கு சுதந்திரம் அளிக்காமல் ஒரு இடத்தில் அடைக்கப்பட்டு அவர்களிடம் இருந்து வேலை வாங்குவது என்பது கொத்தடிமை தொழிலைச் சார்ந்தது அது போன்று மதுரையில் எங்கேயாவது நடந்தால் உடனடியாக எங்களை தொடர்பு கொண்டால் 24 மணி நேரத்தில் தக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார் தமிழக அரசின் இலக்கு 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் கொத்தடிமை தொழிலை முற்றிலுமாக அகற்றுவது அத நோக்கி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று இந்த விழிப்புணர்வு பேரணியை நாங்கள் தொடங்கி வைத்துள்ளோம் என்று கூறினார்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!