மதுரை அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் 500க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், மதுரை அரசு போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலகம் முன்பாக ஓய்வூதியர்களுக்கான 105 மாத DA நிலுவை தொகை வழங்க வேண்டும், 20 மாத பணபலன்களை உடனடியா விடுவிக்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் கடுமையான வெயிலில் மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மதுரை பைபாஸ் காளவாசல் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்துஅரசு போக்குவரத்து கழக பேருந்தில் அழைத்துச் சென்றனர். அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.