மதுரையில், கலைத்திறன் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை ஊக்கப்படுத்தியுள்ளது. மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் இந்திய சுதந்திர தின விழாவில் பள்ளி மாணவிகளின் கலைத்திறனை ஊக்கப்படுத்தி பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. சிம்மக்கல் கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவிகளின் ஆடல் பாடல் மற்றும் பாரதமாதா, வேலுநாச்சியார் போன்ற வேடமிட்டு சுதந்திர வீர உரை நிகழ்த்தினர். மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் பேசுகையில், சுதந்திர போராட்டத்தில் ராணி மங்கம்மாள் பங்களிப்பை எடுத்துரைத்தார். மேலும் நாட்டு நலனில் பெண்கள் மற்றும் மாணவிகள் மிகுந்த ஈடுபாடு கொள்ள வேண்டும் என்றும் பேசினார். உதவி தலைமை ஆசிரியர் ரீட்டா நன்றி தெரிவித்தார் நிகழ்ச்சியில் ஆசிரியைகள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.