மதுரை விமான நிலையத்தில் இந்தியாவின் 78வது சுதந்திர தினவிழா..

இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன் தேசிய கொடியை ஏற்றி அணி வகுப்பு மரியாதை ஏற்று கொண்டார். மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் தேசிய கொடியேற்றி மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு வழியாக ஏற்றுக் கொண்டார்.

மதுரை விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை சார்பில் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கம்மாண்டன்ட் விசுவநாதன் தேசியக் கொடியேற்றி அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார். பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதேபோல் மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் தேசிய கொடியை ஏற்றினார். மத்திய தொழில பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன் தலைமையில் வீரர்கள் தேசியக்கொடிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

மேலும் அகில இந்திய அளவில் மதுரை விமான நிலையம் தூய்மைக்கான நான்காவது பரிசை பெற்றதற்காக அனைவருக்கும் விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் ஊழியர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!