மதுரையில் வாலிபர் கொலை; போலீசார் விசாரணை..

மதுரை வில்லாபுரம் பராசக்தி நகர், சிந்தாமணி வயல் வெளி பகுதியில் வாலிபர் கொலை. அவனியாபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மதுரை அவனியாபுரம் வில்லாபுரம் பராசக்தி நகர் வயல் வெளி பகுதியில் பகுதியில் வாலிபர் தலை சிதைந்த நிலையில் காணப்பட்டது. அருகில் உள்ளவர்கள் அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு அவனியாபுரம் போலீசார் சென்று பார்த்தபோது தலை நசுங்கி கைதுண்டான நிலையில் உடலை கைப்பற்றினர். இறந்த வாலிபரின் செல்போனில் வந்த அழைப்பை தொடர்ந்து போலீசார் விசாரணையில், இறந்த வாலிபர் பெயர் மனோஜ் என்றும் (வயது 20) என்றும் மதுரை செல்போன் கடையில் வேலை பார்த்து வருவதாக தெரிகிறது. இதனை அடுத்து போலீசார் இறந்த மனோஜின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவனியாபுரம் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மதுரை மாநகராட்சி காலனியை சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் என்றும், தாயார் ராதா மற்றும் மனோஜ்ற்கு அஜித் என்ற சகோதர் மட்டும் உள்ளார். சகோதரர்கள் இருவரும் ஒரே செல்போன் கடையில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு எட்டு மணி அளவில் நண்பர்கள் வந்துள்ளதால் வெளியே செல்கிறேன் எனக் கூறி சென்று வந்துள்ளவர் இரவு வீட்டிற்கு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து காலையில் அவரது செல்போன் அழைப்பை வைத்து அடையாளம் காணப்பட்டது. அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் குறித்து அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!