மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சேவாலயம் மாணவர் விடுதியில் தமிழ் மொழி வாசித்தல் பயிற்சி மற்றும் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை வகித்து புத்தகங்கள் வழங்கிய அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் பேசுகையில், மாணவர்கள் அறிவு மேம்பட அதிகமாக புத்தகங்கள் வாசித்தல் மிகவும் அவசியம். பள்ளி பாடங்களோடு நூலக புத்தகங்களை தொடர்ந்து வாசிப்பது எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றார். நிகழ்ச்சியில் ஹைக்கூ கவிஞர் இரா.இரவி, தமிழ்நாடு அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்றதை வாழ்த்தி வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. வாசிப்பில் தங்களது திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் விடுதி செயலாளர் சீனிவாசன், உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீர்கள் அமைப்பின் நிறுவனர் சேக்மஸ்தான், சமூக ஆர்வலர் சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விடுதியின் பொறுப்பாளர் கார்த்திகேசன் நன்றி கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.