எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் அனுமந்த்ராவ் உள்ளிட்ட டெல்லி எய்ம்ஸ் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் பொதுக்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இதில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாக்கூர் பங்கேற்றார். இது குறித்து விருதுநகர் எம்.பி தெரிவித்ததாவது, இக்கூட்டத்தில் ராமநாதபுரத்தில் எய்ம்ஸ் வகுப்புகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியமனம் பற்றி விவாதிக்கப்பட்டது. எய்ம்ஸ் கட்டுமான பணி 33 மாதங்களில் இரண்டு கட்டங்களாக கட்டிடங்கள் கட்டப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது. 2026 அக்டோபர் 19-க்குள் அனைத்து விதமான கட்டிடங்களும் கட்டி முடிக்கப்பட உள்ளது.
எய்ம்ஸ் நீண்ட நாள் கனவு தற்போது பத்து சதவீத பணிகள் முடிந்துள்ளது. இன்னும் 18 மாதங்களில் முதற்கட்ட கட்டிடம் வர உள்ளது. கண்ணுக்குத் தெரியும் கட்டிடமாக எய்ம்ஸ் மாற உள்ளது. 18 மாத முடிவில் எய்ம்ஸ் முதல் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் ராமநாதபுரத்தில் பயிலும் ஐந்தாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மதுரையில் கல்வியை தொடரலாம்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.