மதுரை மாவட்டம் பெருங்குடி மண்டேலா நகர் பகுதியில் ஆசிரியர் வீட்டில் 20 பவுன் நகை மற்றும் 4 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை நடந்த இடத்தை அவனியாபுரம் காவல் உதவி ஆணையர் செல்வகுமார் மற்றும் போலீஸார் ஆய்வு செய்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடி மண்டலே நகர் பகுதியில் வசித்து ஒருவர் கார்த்திகேயன். (வயது 50) இவர் செம்பட்டில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இதே போல் இவரது மனைவியின் தவமணி (வயது 47) கழுவங்குளம் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு அனுவித்யா என்ற மகளும் அருண் என்ற மகளும் உள்ளனர். காலையில் காந்திகேயன் தவமணி பள்ளிக்க வேலைக்கு கிளம்பி சென்றுள்ளனர். அனுவித்யா பொறியியல் கல்லூரிக்கும் அவரது தம்பி, அருண் பள்ளிக்கும் கிளம்பி சென்றுள்ளனர்.
நேற்று மாலை 3 மணி அளவில் கார்த்திகேயன் மகள் அனுவித்யா கல்லூரி முடித்து திருப்பி வரும்போது கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிகிடப்பதை பார்த்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அதனை எடுத்து கார்த்திகேயன் மற்றும் தவமணி ஆகியோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டிலிருந்து பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 20 பவுண் தங்க நகை, மற்றும் பணம் 4 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நகை, பணம் இவற்றின் மெத்த மதிப்பு 22 லட்சம். கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அவனியாபுரம் காவல் உதவி ஆணையர் செல்வகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் – வி.காளமேகம்.
You must be logged in to post a comment.