கோயிலுக்கு சொந்தமான நிலத்தை தனியார் பெயருக்கு மாற்றியதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே குசவன் குண்டு கிராம கோயிலுக்கு சொந்தமான நிலத்தை தனியார் பெயருக்கு மாற்றியதை கண்டித்து சாலை மறியல் நடந்தது. இதில் 92 வயது முதாட்டி மற்றும் 20 பெண்கள் உள்பட 80 பேர் கலந்து கொண்டனர். தாசில்தார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சிக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட குசவன் குண்டு கிராமத்தில் பில்லத்தி கருப்பசாமி கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு உரிய வாரிசுகள் குசவன் குண்டு, குதிரை குத்தி, சோளங்குருணி, வலையங்குளம், திருமங்கலம், எஸ். ஆலங்குளம், வலையங்குளம் போன்ற பல்வேறு ஊர்களில் உள்ளனர். இந்நிலையில் குசவன் குண்டு பகுதியை சேர்ந்த முத்தையா மற்றும் தம்பி வீரணன் ஆகியோர் இந்த கோயில் தங்களுக்கு சொந்தமானது என்றும் இதற்கு சொந்தமான இடங்கள் எங்களுக்கு சொந்தமானது என்றும் மற்றொரு வாரிசான ராஜம்மாள் பெயரில் போலியாக பத்திரம் பதிவு செய்துள்ளனர். 

 

இதனை அறிந்த கிராமத்து பொதுமக்கள் கோயில் நிலம் போலி பட்டா மூலம் ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் தாசில்தார் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்திருந்தனர். நடவடிக்கை தாமதமானதால் இதனை கண்டித்து பொது மக்கள் சோளங்குருணி பகுதியிலிந்து வலையங்குளம் பைபாஸ் ரோட்டில் சாலை மறியல் செய்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பெருங்குடி போலீசார் எஸ் ஐ பாஸ்கரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி செய்து மறியலை கைவிடச் செய்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மதுரை தெற்கு தாசில்தார் சரவணன் கோயில் நிலம் குறித்து பட்டாவினை ஆய்வு செய்தார். பின்னர் கிராம மக்களிடம் பட்டா கிராமத்து பெயரில் தான் உள்ளது எனவும், இதனால் பொதுமக்கள் பயப்படத்தேவையில்லை என உறுதியளித்தார். கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனிநபர் பெயரில் பட்டா மாற்றியதால் சோளங்குருணி, வலையங்குளம், குசவன் குண்டு பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது. மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்றி கோவில் நிலத்தை மீட்டுத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!