திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட ஒன்றிய கவுன்சிலரால் பரபரப்பு..
மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில் வாயில் கருப்பு துணியுடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட ஒன்றிய கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது. விரகனுார் ஊராட்சி பகுதியில் காவேரி கூட்டு குடிநீர், சாலை, சாக்கடை போன்ற முக்கிய பிரச்சனைகள் குறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. இது குறித்து விரகனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமாவிடம் நேரடியாக புகார் செய்தும் கண்டு கொள்ளவில்லை என கூறி கவுன்சிலர் பார்த்திபராஜன் 3 மணி நேரம் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து அதிமுக ஒன்றிய குழு தலைவர் நிலையூர் முருகன் கவுன்சிலர் பார்த்திபராஜனிடம் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் பேராட்சி பிரேமா விரகனூர் பகுதியில் ஆய்வு செய்வதாகவும், அடிப்படை பிரச்சனைகளில் உடனடியாக தலையிட்டு தீர்வு செய்வதாகவும் உறுதியளித்ததன் பேரில் ஒன்றிய கவுன்சிலர் பார்த்திபராஜன் தனது தர்ணா போராட்டத்தை விலக்கிக் கொண்டார். இது குறித்து அதிமுக ஒன்றிய குழு தலைவர் நிலையூர் முருகன் கூறுகையில், விரகனூர் ஒன்றிய கவுன்சிலர் பார்த்திப ராஜன் காவிரி கூட்டு குடிநீர் மற்றும் சாலை போன்ற அடிப்படை வசதிகள் குறித்து கூறியவற்றை வட்டார வளர்ச்சி அலுவலர் செயல்படுத்தவில்லை என்றும் மேலும் சிறப்பு ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள தகவல் தெரிவிக்கவில்லை என்றார். திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர் பார்த்திப ராஜன் வாயில் கருப்பு துணி கட்டி திடீரென தரையில் அமர்ந்து போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதிகளில் ஆய்வு செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து இந்த பிரச்சனை முடித்து வைக்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.