மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வாழ்த்து..

சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள கம்போடியா நாட்டிற்கு செல்லும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வாழ்த்து தெரிவித்தார். போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி தம்பதியான குருநாதன் – மாரீஸ்வரி மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பங்கேற்று தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்ற தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு 5 தங்கப் பதக்கமும் 1 வெள்ளி பதக்கமும் பெற்று சாதனை படைத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள இவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றதால் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச போட்டி CAMBODIA OPEN PARA BOWLING CHAMPIONSHIP-2024 கம்போடியா நாட்டில் 21.06.2024 முதல் 27.06.2024 வரை நடைபெற உள்ள நிலையில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்த்து சாதனை படைக்க உள்ளார்கள். இந்த நிலையில் சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள கம்போடியா நாட்டிற்கு செல்லும் மாற்றுத்திறனாளி வீரர்களான குருநாதன் – மாரீஸ்வரி தம்பதியினர் மதுரை கேகே நகரில் முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமன ஆர்பி.உதயகுமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!