மதுரையில் கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

மதுரையில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவி வழங்கல்.

மதுரை மாநகர் மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. மாநகர தலைமை ரஜினி ரசிகர் மன்ற துணைச் செயலாளர் அழகர்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ரஜினி முருகன் என்பவரின் மகளான ரம்யா அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் 600 க்கு 482 மதிப்பெண் பெற்று தற்போது கல்லூரி மேற்படிப்பு தொடர உள்ள நிலையில், மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் மன்ற துணைச் செயலாளர் கழக அழகர்சாமி அவரது சொந்த நிதியிலிருந்து கல்வி உதவி தொகையாக 75ஆயிரம் ரூபாய் வழங்கினார். அதோடு அப்பகுதியில் மிகவும் வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த விழாவில் திருப்பரங்குன்றம் நகரச் செயலாளர் கோல்டன் சரவணன், மாவட்ட நிர்வாகி தளபதி ரஜினி மாரி, எல்லிஸ் நகர் ரஜினிகாந்த் ரஜினி முருகன் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தினர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!