சோழவந்தான் அருகே குண்டும் குழியுமான சாலை; பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி..
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து முதல் திருவேடகம் வரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டிய பள்ளத்தை சரிவர மூடாததால் தற்போது பெய்து வரும் மழைக்கு சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக தச்சம்பத்து திருவேடகம் பகுதியில் அதிக அளவில் பள்ளங்கள் இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நெடுஞ்சாலைத்துறையினர் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறிய மழை பெய்தாலே சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி விடுவதால் வாகனத்தில் வருவோர் பள்ளத்தில் விழுந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. ஆகையால் திருவேடகம் முதல் தச்சமுத்து வரை உள்ள சாலையை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டுமென இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.