நாடாளுமன்றத் தேர்தல் இந்திய ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பாற்றுவதையே கருப்பொருளாக கொண்டுள்ளது; மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் பேட்டி

நாடாளுமன்றத் தேர்தல் இந்திய ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பாற்றுவதே கருப்பொருளாக கொண்டுள்ளது என மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் வேட்பு மனு தாக்கலுக்கு பின்னர் பேட்டி

மதுரை நாடாளுமன்ற தொகுதியில், திமுக கூட்டணியில் சார்பில் போட்டியிடும் சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நிகழ்வில் திமுக அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் தளபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு மாற்றாக சி.பி.எம் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக, திருவள்ளூர் சிலை சந்திப்பிலிருந்து ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் கூறுகையில், “இந்தியாவில் இதுவரை நடைபெற்ற 17 நாடாளுமன்ற தேர்தல்களிலும் ஆட்சி மாற்றமே கருப்பொருளாக இருந்தது. 18-வது நாடாளுமன்றத் தேர்தல் இந்திய ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பாற்றுவதையே கருப்பொருளாக கொண்டுள்ளது. ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பாற்ற இந்திய அளவில் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பாஜக ஆட்சி அகற்றப்பட்டு இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள். 3 ஆண்டுகளில் திமுக தலைமையிலான அரசு மதுரைக்கு செய்துள்ள திட்டங்கள், அமைச்சர்கள் உருவாக்கிய அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் நாங்கள் செய்ய சாதனைகளை கூறி வாக்கு சேகரிப்போம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” என கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!