சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிலம்ப பட்டையம் வழங்கல்..

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, கருமாத்தூரில் மீசைகாரர் சிலம்பகூடம் நடத்திய சிலம்பாட்ட போட்டியில், வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிலம்பபட்டையம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்தப் போட்டியில், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இப் போட்டியானது, பொன் சங்கரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. போட்டியில், கலந்து கொண்ட மாணவர்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப பச்சை நீலம் மஞ்சல் பட்டையம் வழங்கபட்டது. இதில், உசிலம்பட்டி பகுதியிலிருந்து மாஸ்டர் கெளதம் தலைமையில் சுமார் 80 மாணவர்கள் கலந்து கொண்டனர். பொட்டுலு பட்டியை சேர்ந்த தாரணியா சுபாஷ், ஆ. புதுபட்டியை சேர்ந்த ஸ்ரீ பதி ஆகியோர் வெற்றி பெற்று பச்சை பட்டையம், பாராட்டுசான்று பரிசுகளை மீசைகார சிலம்பகூடம் தலைவர் பொன் சங்கர் மூர்த்தியிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

மேலும், சிவகங்கை சிவம் மார்சியல் ஆர்ட்ஸ் சிலம்பம் அகடாமி சார்பில், சிவகங்கை மாவட்டம் பேருந்து நிலையம் அருகே, தனியார் மஹாலில் மாவட்ட அளவிலான 38 வது சிலம்ப போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், மாவட்ட அளவிலான தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவிகள் 800 க்கும் மேற்பட்டோர் இந்த சிலம்ப போட்டியில் கலந்து கொண்டனர். சிலம்பம் போட்டிகளில், சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டு சிறப்பித்தார். சிவம் மர்சியல் உரிமையாளர் பரமசிவம் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தார். மேலும், சிலம்பம் ,கராத்தே மற்றும் யோகா பயிற்சி ஆசிரியர்கள், குழந்தைகள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!