மதுரை கீழக்குயில் குடியில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது தமிழர் பாரம்பரியத்தை போற்றும் விதமாக கோலப்போட்டிகள் ஜல்லிக்கட்டு மாடு மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது..
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள கீழக்குயில் குடியில் புகழ்பெற்ற சமணர் படுகை உள்ளது இங்கு சுற்றுலாத் துறையின் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது பொங்கல் விழாவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கீழக்குயில் குடி கிராம மக்கள் கலந்து கொண்டனர் தமிழக கலாச்சார மரபினை போற்றும் வகையில் வண்ணக் கோலங்கள் மற்றும் ஜல்லிக்கட்டு மாடடை அலங்கரித்து கொண்டுவரப்பட்டது மேலும் கல்லூரி மாணவிகளின்பரதநாட்டியம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மத்திய சுற்றுலாத் துறையின் தென்மண்டல இயக்குனர் வெங்கடேசன் தத்தா திரியன் கூறுகையில் தமிழகத்தில் சுற்றுலாத்துறை மேம்படுத்தவும் தமிழருடைய கலாச்சாரத்தை வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ளவும் பொங்கல் விழா நடைபெறுகிறது.
மதுரையில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா முதன்முதலாக தற்பொழுது தான் நடைபெறுகிறது கடந்த ஆண்டுகளில்தஞ்சாவூர் மற்றும் பொள்ளாச்சியிலும் பொங்கல் விழா நடைபெற்றது இதன் நோக்கம் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா மாணவர்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அவர்களுடன்உங்கள் பண்டிகை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதன் நோக்கம் நாம் தனியாக வீட்டில் பொங்கல் கொண்டாடுவதை ஊருடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடும் விதமாக கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் மற்றும் சுற்றுலா வந்த அயல் நாட்டுப் பயணிகள் ஆகியவருடன் பொங்கல் பண்டிகை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மதுரை என்றால் பொங்களுக்கு சிறப்பான இடம் உள்ளது .மேலும் பொங்கல் பண்டிகைக்காக ஜல்லிக்கட்டு சிறப்பாக கொண்டாடப்படும். இந்நிகழ்ச்சியில் மதுரை டிராவல்ஸ் கிளப் பவுண்டேஷன் டென் பவுண்டேஷன் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் கல்லூரி பள்ளி மாணவர்களுடன் கீழக்குயில் குடி கிராம மக்களும் இணைந்து கலந்து கொண்டனர்.
இந்த பொங்கல் விழா மாணவர்களுக்கும் வெளிநாட்டு பயணிகளுக்கும் ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும் . பொங்கல் விழாவில் கல்லூரி மாணவர்கள் தாங்களாகவே பொங்கல் சமையல் செய்தனர் .தற்போது வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் நமது கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களுடன் நமது உணவு வகைகளையும் விரும்புகின்றனர். அதன் நோக்கமாகவே இன்று பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது .
இதில் கோலப்போட்டி, பரதநாட்டியம் போன்ற போட்டிகள் நடைபெறுகிறது. இந்த பொங்கல் விழாவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா போன்ற வெளிநாட்டிலும் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டுள்ளனர்.
சுற்றுலா மேம்பாடு திட்டத்தின் மூலம் தமிழகத்தில் சுற்றுலா வளர்ச்சிக்காக இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றது என சுற்றுலாத்துறை தென்பண்ட இயக்குனர் வெங்கடேசன் தத்தாத்ரேயர் கூறினார்…
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









