திருப்பரங்குன்றம் அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்..

திருப்பரங்குன்றம் அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரி கிராமத்தில் ஆதி சிவன் நகரில் ரூபாய் 55 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்காக, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோமீட்டர் தொலைவில் பெயர்த் தெடுக்கப்பட்ட சாலையை இதுவரை சீரமைக்காததால், கற்கள் பெயர்ந்து அவ்வழியே செல்லக்கூடிய குழந்தைகள், முதியோர் கீழே விழுந்து காயம் ஏற்படுவதாகவும், இருசக்கர வாகனங்கள் நாள்தோறும் பழுது ஏற்பட்டு வருவதால், கூலி தொழிலாளர்கள் இருக்கும் அப்பகுதியில் பெரும் அவதிக்கு ஆளாகி வருவதுடன், பள்ளி குழந்தைகள் முதல் முதியோர் வரை வெளியில் நடமாட முடியாமல் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும், இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய அதிகாரியிடம் முறையிட்டு எந்த பலனும் கிடைக்காததால், நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 30 நிமிடத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தில், காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரியிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Abubakker Sithik

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!