தமிழ்நாடு வியாபாரிகள் சங்க கூட்டம்; போதை இல்லா தமிழகத்தை உருவாக்க தீர்மானம்..

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க மதுரை மண்டல நிர்வாகிகள் கூட்டம்; போதை இல்லா தமிழகத்தை உருவாக்க தீர்மானம்..

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மதுரை மண்டல நிர்வாகிகள் கூட்டம், வைகை வடகரை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மண்டல தலைவர் மைக்கல்ராஜ் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சூசை அந்தோணி, மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல இளைஞர் அணி தலைவர் சிவா வரவேற்றார். மாநில தலைவர் முத்துகுமார் சிறப்புரை நிகழ்த்தினார். மாநில செயலாளர் அந்தோணிராஜ், மாநில நிர்வாகிகள் மரிய சுவிட்ராஜன், பிரபாகரன் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கி பேசினர்.

இந்த கூட்டத்தில், கோவையில் நடைபெறும் 41-வது வணிகர் தின மாநாட்டிற்கு மதுரை மண்டலத்தின் சார்பில் 1000 பேர் செல்ல வேண்டும். போதையில்லாத தமிழகத்தை உருவாக்க தமிழக அரசு உரிய நவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல், மதுரை மண்டலத்தின் சார்பாக முதல்- அமைச்சருக்கு ‘மிஸ்டுகால்’ கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. ரவுடிகளிடம் இருந்து வியாபாரிகளை பாதுகாக்க வியாபாரிகளுக்கு தனியாக பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், நிர்வாகிகள் கண்ணன், வாசுதேவன், கரண்சிங், ஆதி பிரகாஷ், கார்த்திக், விரகனூர் பகுதி நிர்வாகிகள் சுருளிராஜன், ஆனந்தன், கார்த்திக், மகளிர் அணி பாக்கியலட்சுமி, ராஜம்மாள், கோகிலா, கிழக்கு பகுதி நிர்வாகிகள் ஜெயராஜ், பிச்சைபழம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல பொது செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Abubakker Sithik

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!