திருமங்கலம் கோவில் வாசலில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு..

திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு..

திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவில் வாசலில் நேற்று இரவு 7 மணி அளவில் எலக்ட்ரிக்கல் வேலைக்கான பொருட்கள் வைப்பது போன்ற ஒரு பெட்டி இருந்துள்ளது.‌ இதனை பார்த்த கோவில் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெட்டியை திறந்து பார்த்த போது அதில் இருந்த பொருள்கள் வித்தியாசமாக இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த விசாரணையில் அது திருமணங்களுக்கு போட்டோ வீடியோ எடுக்கும் போது பயன்படுத்தப்படும் மினி கிரேன் (கிம்பல்) என்பது தெரிய வந்தது. இதை அடுத்து அந்த பெட்டியை போலீசார் போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்றனர். கோவிலுக்கு போட்டோ எடுக்க வந்த யாரேனும் அங்கு விட்டுச் சென்றார்களா அல்லது அந்த வழியை கலக்கும் போது வாகனத்தில் இருந்து கீழே விழுந்து கிடந்ததா என்பது குறித்தும், பெட்டியை தொலைத்தவர்கள் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Abubakker Sithik

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!