திருமங்கலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் கையூட்டு; இருவரை சஸ்பெண்ட் செய்து மதுரை மாவட்ட நலப்பணி இணை இயக்குனர் அதிரடி நடவடிக்கை..
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில், கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில், மதுரை மாவட்ட நலப் பணி இணை இயக்குனர் செல்வராஜ், மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த நோயாளிகளிடம் விசாரணை மேற்கொண்டதில், பிணவறையில் உடற்கூறு பரிசோதனைக்கு வரும் பிணத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கும், அதற்கு உரியவர்களிடம் ரூபாய் 2500 முதல் 5000 வரை லஞ்சம் கேட்ட கார்த்திக் என்ற ஊழியரையும், மருத்துவமனை உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை பெறுவதற்கு லஞ்சம் பெற்ற முத்தையா என்பவரையும், இணை இயக்குநர் செல்வராஜ், உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மேலும் அவர் அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் செவிலியர்களிடம் இது போன்ற லஞ்சம் பெரும் ஊழியர்கள் மீது தீவிர நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என எச்சரித்தார். திருமங்கலம் அரசு மருத்துவமனையில் லஞ்சம் பெற்ற இரண்டு பேரை, சஸ்பெண்ட் செய்த சம்பவம், மருத்துவ மனை செவிலியர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









