ரயில்வே துறையில் புது யுக்தியை கண்டுபிடித்து அசத்திய மாணவன்..

ரயில் பெட்டியில், மேலடுக்கில் முதியோர் படுக்கை இருக்கைக்கு செல்ல அறிவியல் கண்காட்சியில் புது யுக்தியை கண்டுபிடித்த மாணவன்..

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் நடைபெற்ற 38 மாவட்டங்களிலிருந்து வந்த 64 மாணவர்களின் அறிவியல் கண்காட்சி. (சிறந்து விளங்கிய 8 மாணவர்களை தேர்வு செய்து , தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டியில் பங்கேற்க தேர்வு – இதில் பெரும்பான்மையான மாணவர்கள் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களாவர்)

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், பல்வேறு மையங்களில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள 2000 மாணவர்கள் பங்கு பெற்ற நிலையில், அதிலிருந்து சிறந்த 64 மாணவர்களை தேர்வு செய்து, 38 மாவட்டங்களிலிருந்து வந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சியில் ரயில் பெட்டியில் மேலடுக்கில் முதியோர் சென்று அமர்வதற்கு, அதி தொழில்நுட்ப புது யுக்தியை மாணவன் கண்காட்சியில் வைத்து செய்து காண்பித்தது அனைவரையும் கவர்ந்தது. இதேபோன்று, கிணற்றில் மனிதர்களோ, விலங்குகளோ விபத்துக்குள்ளானால், அதனை வெளியேற்ற தானியங்கி கருவி அமைத்து உயிரை காப்பாற்றலாம் என்பதை கண்காட்சியில் வடிவமைத்து வைக்கப்பட்டு பார்வைக்கு செய்து காட்டியது பாராட்டை பெற்றது. இதேபோன்று சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி, இரண்டு வாகனங்கள் எதிரில் வந்தால், எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கை குறைந்த ஒளியில் ஒளிரச்செய்யும் கருவியையும் மாணவ மாணவிகள் பார்வைக்கு வைத்திருந்தனர்.

இந்த கண்காட்சியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பெரும்பாலானோர் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில் பார்வைக்கு வைத்திருந்தனர். மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம் , சென்னை, கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட 38 மாவட்டங்களில் இருந்து, 64 பேர் பங்கு கொண்டு இக் கண்காட்சியில், சிறந்த மாணவர்கள் எட்டு பேரை தேர்வு செய்தனர். அந்த 8 பேரையும் விரைவில் டெல்லியில் நடைபெற உள்ள மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டியில் பங்கேற்பதற்கு தேர்வு செய்துள்ளனர். தேசிய அளவில் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவருக்கு 15 நாள் ஜப்பான் சென்று வர அரசு செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பம் மைய நிர்வாகிகள் தெரிவித்தனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Abubakker Sithik

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!