சோழவந்தான் அருகே டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்..

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே டாஸ்மாக் கடை மூடக்கோரி, நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் உட்பட 200 பேர் கலந்து கொண்டனர். திடீரென்று டாஸ்மார்க் கடை அருகே ஆர்ப்பாட்டம் செய்ய நாம் தமிழர் கட்சியினர் ஊர்வலமாக சென்றதால் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக் குட்பட்ட, கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரம் மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மார்க் கடையை மூடக்கோரி, ஆர்ப்பாட்டம் நடந்தது . இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அருண் ஜெயசீலன் தலைமை தாங்கினார். பாசறை பொருளாளர் இருளாண்டி, மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சிவானந்தம், முன்னாள் படை வீரர் பாதுகாப்பு பாசறை மாவட்ட செயலாளர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழில் நுட்ப அணி கார்த்திகேயன் வரவேற்றார். தொகுதி செயலாளர் சங்கிலி, தொகுதி செயலாளர் சங்கரபாணி, துணைச் செயலாளர் முத்தீஸ்வரர், தொகுதி பொருளாளர் சதீஷ்குமார், ஒன்றியச் செயலாளர் செல்லப்பாண்டி, ஒன்றிய மாணவர் பாசறை செல்லப்பாண்டி ஆகியோர் டாஸ்மாக் கடை மூடக்கோரி பேசினார்கள். இதைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன், நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் திரண்டு டாஸ்மாக் கடையை நோக்கி ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று புறப்பட்டு சென்றனர். இவர்களை அங்கிருந்த சோழவந்தான் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிண்ணன் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ,அங்கு பரபரப்பாக காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஒரு வாரம் கழித்து முறையாக அனுமதி பெற்று டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என்று போலீசார் கூறியதன் பேரில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் மற்றும் கிராம பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Abubakker Sithik

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!