திருப்பரங்குன்றம் அருகே மனைவி கணவன் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சோகம்..

குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி கணவன் அடுத்தடுத்து தற்கொலை திருப்பரங்குன்றம் அருகே சோக நிகழ்வு..

திருப்பரங்குன்றம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக தம்பதியினர் இடையே நடைபெற்ற தகராறில் மனைவி ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் துக்கம் தாளாமல் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி, கணவன் அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள் திருப்பரங்குன்றம் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் கைத்தறி நகரை சேர்ந்த 58 வயதான சந்திரசேகர் இவரது மனைவி 53 வயதான இந்துமதி தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். இருமகன்களுக்கும் திருமணம் ஆகி விட்ட நிலையில் வீட்டிலிருந்த சந்திரசேகர் இந்துமதி தம்பதியினர் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல் இருவருக்கும் தகராறு நடந்துள்ளது. இருவருக்கும் ஏற்பட்ட சண்டைக்கு பிறகு சந்திரசேகர் கோபத்துடன் வீட்டைவிட்டு வெளியில் சென்றுள்ளார். கணவன் கோபத்தில் வெளியில் சென்றதால் மனம் உடைந்த இந்துமதி வீட்டில் கழிவறை சுத்தம் செய்ய வைத்திருந்த ஆசிட்டை எடுத்து குடித்து மயங்கி விழுந்துள்ளார் .

இந்த சம்பவம் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக இந்து மதியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இந்துமதி நேற்று இரவு உயிர் இழந்தார். இந்த சம்பவம் எதுவும் தெரியாத சந்திரசேகர் வீட்டிற்கு வந்த போது உறவினர்கள் நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த சந்திரசேகர் மன விரக்தியில் இருந்துள்ளார். உறவினர்கள் அனைவரும் இந்துமதி உடலை வாங்குவதற்காக மருத்துவமனைக்கு சென்ற நிலையில் சந்திரசேகர் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.

காலையில் சந்திரசேகர் வீட்டு கதவு வெகு நேரம் ஆகியும் திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் கதவை தட்டி உள்ளனர். கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சந்திரசேகர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்த சந்திரசேகரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!