போலி முகநூல் தொடங்கி பணம் பறித்த கும்பல்; கல்லூரி உதவி பேராசிரியர் சைபர் கிரைமில் புகார்..

போலியான முகநூல் தொடங்கி கல்லூரி பேராசிரியர் மாணவர்கள் மற்றும் நண்பர்களிடம் பணம் பறித்த கும்பல்..

மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் கார்த்திக் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் 33. இவர் காரியாபட்டியில் உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மதுரை சைபர் கிரைம் போலீசாரிடம் அளித்துள்ள புகார் மனு: எனது முகநூல் கணக்கு பெயரில் போலி கணக்கு துவங்கிய மர்மநபர்கள் சிலர் நேற்று முன்தினம் முகநூலில் எனது நண்பர்கள் பட்டியலில் உள்ள சிலரிடம் பேசி பணம் கேட்டுள்ளனர். பின் முகநூல் கணக்கிலிருந்து எனது புகைப்படத்தை தரவிறக்கம் செய்து அதை வேறறொரு எண்ணின் வாட்ஸ் ஆப் கணக்குக்கு முகப்பு படமாக வைத்து எனது முகநூல் நண்பர்களின் செல்போன் எண்களை வாங்கி பேசி எனது கல்லூரி மாணவரிடம் ரூ 1,000மும் எனது கல்லூரி நண்பரிடம் ரூ.9,000மும் என ரூ,10,000 வரை வாங்கியுள்ளார். அவர்கள் பணம் கொடுத்த பின்பே எனக்கு ஏமாற்றப்பட்டது தெரிந்தது. எனது முகநூல் கணக்கை வைத்து பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!